
அகத்தியா | ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில் – சாகச உலகம்
டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் "அகத்தியா"வாகும்.
‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ என்ற ஈர்ப்பான கதைக்கருவுடன், அதிநவீன CGI-உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில் த்ரில்லர் பாணியில், ஒரு புதுமையான உலகம் படைக்கப்பட்டிருக்கும் "அகத்தியா" படத்தினைப் புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவைத் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என இப்படத்தின் டை...


