பிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு
ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் அரங்கில் 11 மார்ச் அன்று நடைபெற்றது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை, பாசிடிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் சார்பாக ராஜேஷ் குமாரும், L.சிந்தனும் தயாரித்துள்ளனர்.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், “இப்படத்தின் ஷூட்டிங்கை மிகக் குறைந்த காலத்தில் முடித்துள்ளோம். ஒட்டுமொத்த குழுவின் உதவியில்லாமல் இது சாத்தியமில்லை. படத்தில் 18 ஆர்டிஸ்ட் உள்ளனர். அவர்களது ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமாயிற்று. அற்புதமான பாடல்களை அளித்துள்ள யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு நன்றி. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ரியோ ராஜை அறிமுகம் செய்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படத்தைப் பார்த்துதான், ரியோ ராஜ் இந்த கேரக்டரின் எமோஷன்ஸைச் சுமக்கக்கூடிய நடிகர் என்பதைத் ஹெரிந்து கொண்டேன்” என...