
தி ஆஃப்ரிக்கன் டாக்டர் விமர்சனம்
ஆதரிக்க யாருமில்லாத அநாதையான காங்கோ நாட்டைச் சேர்ந்த கருப்பரான சியோலோ ஜன்டோகோ, தனது கடினமான உழைப்பால், ஃபிரான்ஸில் மருத்துவப் படிப்பை முடிக்கிறார். காங்கோவின் சர்வாதிகாரியான மொபட்டூவிற்கு பெர்ஸ்னல் மருத்துவராகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கிறது. ஊழலில் திளைக்கும் ரத்த வரலாறு கொண்ட ஜனாதிபதியிடம் பணி புரிய விரும்பாமல், ஃபிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெறுவதற்காக, மார்லி-கோமான்ட் எனும் கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரியச் சம்மதம் தெரிவிக்கிறார். ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குடியேறப் போகிறோம் எனத் தவறுதலாக நினைத்துவிடும் சியோலோவின் குடும்பத்திற்கு, சதா குளிர்ந்து கொண்டே இருக்கும் புதிய சூழல் பிடிக்காமல் போகிறது.
கருப்பர்களையே கண்டிராத அந்தக் கிராமத்து மக்கள், சியோலோவை மருத்துவராக ஏற்றுக் கொள்ளாமல், அவரை மந்திரவாதியாகப் பாவித்து ஒதுக்குகின்றனர். உடல்நலம் சுகமில்லை என ஒரு பண்ணையிலிருந்து ஃபோன் வர, ...


