அய்யப்பனும் கோஷியும் விமர்சனம்
‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என எழுத்தாளர் ஜி. நாகராஜன் ஒரு வரியில் சொன்னதை மூன்று மணி நேரத் திரைப்படமாகக் கண்முன்னால் விரிய வைத்திருக்கிறார் இயக்குநர் சச்சி. முன்னரே பிரித்வி, பிஜூ மேனன் கூட்டணியில் லட்சத்தீவின் பின்னணியில் அனார்க்கலி என்ற சுவாரஸ்யமான காதல் கதையைச் சொன்ன, ‘ட்ரைவிங் லைசென்ஸ்’ திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய அதே சச்சிதான் இவர்.
உண்மையில் இது இரண்டு மனிதர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு சார்ந்த போராட்டம் என்பதுபோல தோன்றினாலும் அதனூடே உண்மையில் அதிகாரம் என்பது எப்படி எந்தெந்த வகையில் யார் யாருக்காகவெல்லாம் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் பூடகமாக உணர்த்திச் செல்கிறது என்பதனால்தான் இந்தத் திரைப்படம் முக்கியமானதாகிறது.
பொதுவாக இந்தத் திரைப்படத்தை கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் தன்முனைப்பு போராட்டமாக மட்டுமே பலரும் அடையாளப்படுத்துகிறார்க...