Shadow

Tag: Amiah Miller

வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ் விமர்சனம்

வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சீசர், தனது தலைமைக் குணத்தால் மனிதக் குரங்குகளை மட்டுமல்ல, மனிதர்களையும் கவர்ந்த ஒப்பற்ற தலைவர். மனிதர்களின் கொலை வெறித் தாக்குதல்களில் இருந்து தன் இனத்தைக் காக்க நினைக்கிறார் சீசர். அதற்கு முன்பே கலோனலால் அவரது மனைவியும் மகனும் கொல்லப்படுகிறார்கள். சினம் கொள்ளும் சீசர், தன் இனத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு, கலோனலைக் கொன்று பழி வாங்கப் புறப்படுகிறார். சீசர் கலோனலைக் கண்டுபிடிக்கும் முன், கலோனல் அவரது இனத்தைப் பிடித்துச் சிறையில் அடைத்து, அடிமைகள் போல் வேலை வாங்குகிறார். சீசரும் கலோனலிடம் சிக்கிக் கொள்ள, ஏப்ஸ்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே இந்த அற்புதமான படத்தின் கதை. லோகன் படத்தை, சிறுமி டாஃப்னீ கீன் அழகாக்கியது போல், இப்படத்தை அமியா மில்லர் எனும் சிறுமி அற்புதமாக்கியுள்ளார். மனிதக் குரங்கு லூக்கா இறக்கும் பொழுது, அதன் காதில் பூவை வைத்து சிறுமி சிந்தும் கண்ணீர், பார்வ...