Shadow

Tag: Andhagan meaning

அந்தகன் என்றால் என்ன? – இயக்குநர் தியாகராஜன்

அந்தகன் என்றால் என்ன? – இயக்குநர் தியாகராஜன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
அந்தகன் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பார்வையற்றவன் என்று பொருள். 'அந்தாதுன்' எனும் ஹிந்திப் படத்திற்கு உரிமை வாங்கு, பிரஷாந்தை கதையின் நாயகனாக நடிக்க வைத்து இயக்கியுள்ளார் தியாகராஜன். 'அந்தகன் - தி பியானிஸ்ட்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் தியாகராஜன், ''இன்றைய தினம் அனைவரையும் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் இன்று நண்பர்கள் தினம். உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் பழகினார்கள். படப்பிடிப்பு ஒன்பது மணி என்றால் அனைவரும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்புத் தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்டதை விட படப்பிடிப்பை சீக்கிரமாக நிறைவு செய்து விடுவோம். சமுத்திரக்கனி, அந்த காலகட்டத்திய என்னை நினைவுப்படுத்துபவர். தோற...