தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம்
எதிரிகளான பறவைகளும் பன்றிகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, பறவைத் தீவையும், பன்றித் தீவையும் அழிக்க நினைக்கும் கழுகுத் தீவின் ஜெட்டாவிடமிருந்து எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி முதற்பாகத்தையும் விட அதிக கலகலப்புக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் துரோப் வேன் ஆர்மன்.
படம் கதையிலும், கலகலப்பிலும் மட்டும் கவனம் செலுத்தாமல், கதாபாத்திரங்களின் குண இயல்பையும் கணக்கில் கொண்டுள்ளதுதான் முதற்பாகத்தை விடவும் ஈர்க்கக் காரணம். ‘பறவைத் தீவைக் காக்கும் சூப்பர் ஹீரோ’வாக தான் என்றுமே புகழப்பட வேண்டும் என நினைக்கிறது ரெட்; பகையை மறந்து அமைதி ஒப்பந்தத்திற்குத் தூது விடுகிறது பன்றித் தீவின் லியானார்டோ; தன் பயந்த சுபாவத்தை மறைத்து ‘மைட்டி ஈகிள்’ என்ற பெயர் மட்டுமே போதுமெனத் தனிமையில் வாழ்கிறது ஈத்தன் கழுகு; கல்யாணத்தன்று பயந்து ஓடி...