தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம்
‘தி ஆங்க்ரி பேர்ட்ஸ்’ என்ற வீடியோ கேமை, சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் திரைப்படமாகத் தயாரித்துள்ளது.
பறக்க இயலாத பறவைகளுக்கு, பச்சை நிறப் பன்றிகள் மேல் அப்படியென்ன கோபம்? ஏன் வெஞ்சினம் கொண்டு பன்றிகளைத் தாக்குகிறார்கள் என்பதே படத்தின் கதை.
ரெட் (Red - Hot head) எனும் சிவப்பு நிறப் பறவைக்கு பெரிய புருவங்கள்; நண்பர்களும் கம்மி. ஊருக்கு ஒதுக்குபுறமாக வீடு கட்டி வாழ்கிறது. கோபம் அதிகமாக வருகிறதென, கோபத்தைக் குறைக்கும் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே ரெட்-க்கு இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். ஒன்று மஞ்சள் நிற சக் (Chuck – Speed Demon); மற்றொன்று பாம் (Bomb – Short Fuse). சக்-கிடம் அபிரிதமான வேகம் இயல்பிலேயே இருக்கும். எள் என்றால் எண்ணெயாய் இருத்தல் என்பது என்னவென்று அறிய நீங்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்கணும். பாம்-க்கு கோபம் வந்தால் அவ்விடத்தைத் தீக்கனல்களால் தெறிக்க விட்டுவ...