Shadow

Tag: Annadurai thirai vimarsanam

அண்ணாதுரை விமர்சனம்

அண்ணாதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘அண்ணாதுரை’ எனும் தலைப்பு வைத்ததற்கு எந்தச் சிக்கலும் எழாதது அதிசயத்திலும் அதிசயம். ஆனாலும் உண்மை. அனைவரும் எதிலோ பிசியாக இருந்து விட்டதால், இந்தப் படத்துக்கு இலவச விளம்பரம் கிடைக்காமல் போய்விட்டது. அண்ணாதுரையும் தம்பிதுரையும் இரட்டையர்கள். விதி அவர்கள் வாழ்வைப் புரட்டிப் போட, தியாகத்தில் சிறந்தவர் யாரென்று இருவருக்குள் நடக்கும் போட்டிதான் படத்தின் கதை. விஜய் ஆண்டனி முதன்முறையாக இரட்டையர்களாகத் தோன்றியுள்ளார். தாடி இருந்தால் அண்ணன், இல்லாவிட்டால் தம்பி. போதையில் இருந்தால் அண்ணன், தெளிவாக இருந்தால் தம்பி. விஜய் ஆண்டனிக்கு அம்மா சமைத்துக் கொடுத்தால் அவர் அண்ணாதுரை, அம்மாவிற்கு விஜய் ஆண்டனி சமைத்துக் கொடுத்தால் அவர் தம்பிதுரை. படத்தின் தலைப்பு வரும் முன், வருகின்ற விஜய் ஆண்டனியின் அறிமுகம் மிக அட்டகாசமாய் உள்ளது. ஆனால் அந்தப் பூர்வாங்க பில்டப், அதோடு முடிந்து விடுவது துரதிர்ஷ்டம். யமன் பட...