அப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்
யாருமே பேசாத, பேச விரும்பாத ஒரு கருவைத் தனது அப்பா காண்டம் குறும்படத்தில் இயக்குநர் ஆர்வா தொட்டுள்ளார். இப்படத்தை ரெட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
வயதுக்கு வந்த கல்லூரி படிக்கும் மகனிடம், ஒரு அப்பா, செக்ஸ், மாஸ்டர்பேஷன், சேஃப்ட்டி, காண்டம் எனப் பேசுகிறார். மகனின் வளர்ச்சியில் அப்பாவின் பங்கு பற்றிய அத்தியாயம் அல்லது அப்பாவின் ஆணுறை என படத்தின் தலைப்பையே இயக்குநர் இருபொருள்பட வைத்து அசத்துகிறார்.
முதலில், இப்படத்தின் கதைக்கு 26 நிமிட கால அளவு என்பது மிக மிக அதிகம். நேரடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் தொடக்கத்திலேயே சுமார் 6 நிமிடங்களுக்கு ட்ரோன் மூலமாக எடுக்கப்பட்டுள்ள ஏரியல் ஷாட்களால் எக்ஸ்ப்ரீமென்ட் செய்துள்ளனர். அத்தகைய எக்ஸ்ப்ரீமென்ட் குறும்பட இயக்குநர்களுக்கு அவசியம் தான் என்றாலும், கதைக்குத் தேவைப்படாத பட்சத்தில் அதை எடிட்டிங் டேபிளிலேயே கத்தரித்து வீசியிருக்கல...