Shadow

Tag: Aramm movie

‘அறம்’ ராமசந்திரன்

‘அறம்’ ராமசந்திரன்

சினிமா, திரைத் துளி
வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெறும் ஒரு படத்தின் பின்னணியில் இருப்பது அந்தப் படத்தின் கதை, இயக்கம், முன்னணி நடிகரின் நடிப்பு, இசை ஆகிய அம்சங்களைத் தாண்டிக் கதைக்குத் தூண்களாக விளங்கும் மற்ற கதாபாத்திரங்களின் பங்களிப்பும் தான். அந்த வகையில் தற்போது திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி பெற்று, அனைவரையும் கவர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் 'அறம்' திரைப்படத்தில், குழிக்குள் விழுந்த குழந்தையின் தந்தையாக நடித்த ராமசந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. யார் இவர் என்று எல்லோரையும் யோசிக்க வைத்த இவர் அடிப்படையில் ஒரு உதவி இயக்குநர். "நான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன். 17 வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்தேன். முதலில் ஒளிப்பதிவுத் துறையில் தான் பயில வந்தேன். ஆனால் காலம் என்னைத் துணை இயக்குநராக ஆக்கி விட்டது. அப்படியே சில படங்களில் சின்னச் சின்ன கதா பாத்திரங்களில் நடிக்க ஆரம்ப...
அறம் விமர்சனம்

அறம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் ஆந்திர எல்லையில் இருக்கும் காட்டூர் எனும் கிராமத்தில், தன்ஷிகா எனும் நான்கு வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறாள். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மதிவதனி, எப்பாடுபட்டாவது சிறுமியை மீட்டு விட வேண்டுமெனப் போராடுகிறார். கண் கலங்காமல், இப்படத்தைப் பார்த்து விடுவது இயலாததொரு காரியம். சுபமான முடிவு தானெனினும், ஒரு சிறுமியை மீட்க கலெக்டர் தலைமையிலான அரசாங்க ஊழியர்கள் திணறுவதைப் பார்க்கப் படபடப்பாக உள்ளது. இது படமாக இல்லாமல், பார்வையாளர்களின் கண் முன்னே உண்மையிலேயே நடப்பது போன்று மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள படம். அந்தப் பெற்றோரின் தவிப்பை, ஊர் மக்களின் கோபத்தை, கலெக்டரின் கையறு நிலையை, ஃபையர் சர்வீஸ் ஆட்களின் இயலாமையை, ஆளுங்கட்சியின் ‘பவர் பாலிட்டிக்ஸ்’ குறுக்கீட்டை எனப் படம் அத்தனை விஷயங்களையும் உணர வைக்கிறது. படம் பதைபதை...