Shadow

Tag: Arthanaari Movie

அர்த்தநாரி விமர்சனம்

அர்த்தநாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இன்ஜினியரான கார்த்திக்கும், காவல்துறை உயரதிகாரியுமான சத்யப்பிரியாவும் காதலிக்கிறார்கள். சத்யப்பிரியா எடுத்து நடத்தும் ஒரு வழக்கும், தன்னை வளர்த்த செல்வமாணிக்கம் ஐயாவின் மரணத்திற்குக் காரணமானவரைத் தேடும் கார்த்தியின் தேடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. தனித்தனியாக இருவரும் இயங்கினாலும், காதலர்கள் அர்த்தநாரி போல் இணைந்து வேட்டையாடுவதாகப் பதற்றம் கொள்கிறார் வில்லன். இந்தக் கண்ணாமூச்சி வேட்டை எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. கல்வியின் அவசியமும், குழந்தைத் தொழிலாளிகளின் அவலமும் படம் நெடுகே சொல்லப்படுகிறது. சொல்பவராக செல்வமாணிக்கம் எனும் பாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார். அவர் பலமுறை ஏற்று சலித்து விட்ட ஒரு பாத்திரம் என்பதால் படத்தில் அவர் அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதனாலென்ன, ரசிகர்களை எப்படியும் ஈர்த்து விடுவதென்ன ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை இறக்கியுள்ளன...
அர்த்தநாரி – நாயகன் ராம்குமார்

அர்த்தநாரி – நாயகன் ராம்குமார்

சினிமா, திரைத் துளி
தல அஜித்தின் தீவர ரசிகரான ராம்குமார், "நான் தல அஜித்தின் உண்மையான விசுவாசி; வெறி பிடித்த ரசிகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எந்தவித பின்பலமுமின்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அவரைத்தான் என்னுடைய முன்மாதிரியாக பார்க்கிறேன்!" என்று நெஞ்சம் மகிழ்கிறார். ராம்குமார் தனது 'அர்த்தநாரி' திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார். சராசரி சென்னை இளைஞர்களைப் போல இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் ராம்குமார். எனினும், நடிப்பின் மேல் இவர் கொண்ட காதல், இவரை சில விளம்பரப் படங்களில் நடிக்க வைத்தது. "நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அந்த வேலையில் நான் முழு மனத்திருப்தி அடையவில்லை. எனக்குள் இருந்த அந்த ஒரே தேடல் நடிப்பை நோக்கிப் பயணித்ததுதான். அப்போது தான் சில விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். அப்படி நான் நடித்து, திரையரங்கங்களில் திரைய...
ஆண் பாதி பெண் பாதி

ஆண் பாதி பெண் பாதி

சினிமா, திரைத் துளி
கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் என்பவர் கதை எழுதித் தயாரிக்கும் படம் அர்த்தநாரி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரி வேந்தர் பாடல்களை வெளியிட, மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவை தம்பி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள் . படத்தின் டிரைலர் ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது . நாயகன் ராம்குமார் பேசும்போது, “நடிகனாவேன் என நினைக்கலை. மாடலிங்கில் இருந்தப்ப நான் பண்ண விளம்பரம் ஒன்னு சத்யம் தியேட்டர்ல வந்துச்சு. அதைப் பார்த்துட்டுத்தான் தயாரிப்பாளர் முத்தமிழ் என்னிடம் கேட்டார். ஐ.டி.யில் வேலை செய்துட்டிருந்தேன். வேலையை விட்டுட்டு என்ன பண்ணலாம்.. ஃபோட்டோகிராஃபி அது இதுன்னு குழப்பிட்டு இருந்தேன். அப்பத்தான், ‘உங்க மேல் கான்ஃபிடண்ட் இருக்கு’ன்னு சொல்லி நடி...
நடிகை அருந்ததியின் அர்த்தநாரி

நடிகை அருந்ததியின் அர்த்தநாரி

சினிமா, திரைத் துளி
அருந்ததி அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சுந்தர இளங்கோவன். இயக்குநர் பாலாவிடம் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றியவர் இவர். அர்த்தநாரி படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி, "அர்த்தநாரி படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மைச் சம்பவங்கள் எனக்குப் பர்சனலாகவே மிகவும் உத்வேகம் அளித்தன” என்கிறார். அவர் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘தொட்டால் தொடரும்’ முதலிய படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. “இதில் நான் சவால்கள் நிறைந்த ஒரு அண்டர் கவர் போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது வழக்கமான அண்டர் கவர் அதிகாரி கேரக்டர் அல்ல. மிகக் கஷ்டமான ஒன்று. இந்தக் கேரக்டருக்காக நான் நிறையவே ஹோம் வொர்க் செய்து என்னை முழுமையாகத் தயார் செய்து கொண்டேன். துப்பாக்கியைப் எப்படி பிடிப்பது? ட்ரிக்கரை எப்ப...
சவாலும் சோதனையும் எதிர்கொள்ளும் பெண் போலிஸ்

சவாலும் சோதனையும் எதிர்கொள்ளும் பெண் போலிஸ்

சினிமா, திரைத் துளி
“சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளதா இல்லையா என்ற சர்ச்சை இன்றும் நீடித்தாலும் , தொழிற்துறையில் குறிப்பாக காவல் துறை போன்ற இடங்களில் பெண்களுக்கு எதிரான அவலக்கேடுகள் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. எத்தனயோ பெண்கள் இந்தத் துறையில் சாதித்து இருந்தாலும் , இன்னமும் இதைப் போன்ற சில துறைகள் ஆண்களின் மேலாதிக்கத்தில்தான் இருக்கிறது. மேற்கூறிய இந்த விஷயங்கள் மட்டுமல்ல அர்த்தநாரி. காவல் துறைக்குப் பெரும் சவாலாக திகழும் ஒரு வழக்கை துப்பறியும் போலிஸ் அதிகாரிக்கு நேரும் சோதனைகளும் அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பற்றிய கதைதான் அர்த்தநாரி. இந்தக் கதை என்னுடைய தயாரிப்பாளர் திரு.ஏ .எஸ்.முத்தமிழ் எழுதியது. அருந்ததி போலிஸ் அதிகாரியாக நடிக்க பெருமளவில் உழைத்து இருக்கிறார். என்னுடைய சில போலிஸ் நண்பர்கள் மூலம் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அந்த உழைப்பு படத்தில் தெரிகிறது. புது முகம் ராம் குமா...