Shadow

Tag: Arun vijay

மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா விஜயன், பரத் போபண்ணா, அபிஹாசன், பேபி இயல், விராஜ், ஜேஷன் ஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “மிஷன் சாப்டர் -1”.பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ மீது அதிகமான எதிர்பார்ப்புகள் குவிந்திருக்க, சத்தமில்லாமல் வந்து சாதித்துக் கொண்டிருக்கும் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானதும், ஆங்காங்கே அடுத்து என்ன…? என்கின்ற எதிர்பார்ப்பை அழகாக படத்தின் திரைக்கதையில்  அடுக்கி ப்ரசண்ட் செய்திருக்கும் விதமும் படத்திற்கு பலமாக மாறியிருக்கிறது.ஆரம்பத்தில் என்னடா இது, நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற பரிதவிப்பைக் கொடுத்து கொஞ்சமாய் கலங்கவிட்டாலும், அடுத்தடுத்து வந்த காட்சிகளில் ஹ...
குற்றம் 23 விமர்சனம்

குற்றம் 23 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
23 குரோமோசோன்களை மையப்படுத்தி நடக்கும் மெடிக்கல் க்ரைம் தான் படத்தின் கதை. நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைத்துள்ளார் ஈரம் பட இயக்குநரான அறிவழகன். படத்தின் டைட்டில் போடும் பொழுதே கதை தொடங்கி விடுகிறது. டைட்டிலின் ஊடே வரும் அனிமேஷன் மிக அற்புதமாக உள்ளது. ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை அடைந்து கருவாய் உரு கொள்வதை அனிமேஷனாக்கி உள்ளனர். இதயம், கை, கால், விரல்கள் என ஒவ்வொன்றாய்த் தோன்றி, கருவிலுள்ள சிசு புன்னகைக்கும் பொழுது பரவசமாய் உள்ளது. தேவையற்ற அறிமுகங்கள் இல்லாமல், நேரடியாகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். வில்லிவாக்கம் சர்ச்சின் பிரம்மாண்டத்தை தன் கேமிரா கோணத்தால் ரசிக்கும்படி அமைத்துள்ளார். படத்தில் வரும் அனைத்து ஷாட்ஸுமே ரசிக்க வைக்கின்றன. கலை இயக்குநர் ஷக்தியின் பங்கு மகத்தானது. படம் நெடுகே, கதைக்கும் கதை நடக்கும் இடத்திற்கும் இயை...
க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

சினிமா, திரைத் துளி
பொதுவாகவே இயக்குநர் அறிவழகனின் படங்களில் க்ளைமேக்ஸ் காட்சிகள் அனைத்தும் மிகுந்த பரபரப்பாகத்தான் இருக்கும்.  அதுவும் இது ஓர் அதிரடிப் படம் என்பதால், சண்டைக் காட்சிகளுக்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்கிறது சமீபத்தில் வெளியான படத்தின் 'மோஷன் போஸ்டர்'. தற்போது 'குற்றம் 23' , அருண் விஜய்யின் அசத்தலான அதிரடியிலும், அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிலும்  கலை கட்டி வருகிறது. 'சாட்டை' படப்புகழ் மகிமா நம்பியார் அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து  நடிக்கும் இந்த மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படத்தை இந்திர குமார் அவர்களின் 'ரேடான்  திசினிமா பீபள்' நிறுவனத்தோடு இணைந்து 'இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்த்தி அருண் தயாரித்து வருகிறார். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் அருண் விஜய்யின்  'குற்றம் 23' படத்தின் இறுதிக்கட்ட கிளைமாக்ஸ் காட்சிகள், சென்னையி...