Shadow

Tag: Assure Films

“ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது” – விக்ரம் பிரபு | Love Marriage

“ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது” – விக்ரம் பிரபு | Love Marriage

சினிமா, திரைச் செய்தி
அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், லவ் மேரேஜ் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இயக்குநர் சண்முக பிரியன், ''இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் காட்சி திரையிட்ட பிறகு உங்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துகளும் அன்பும், எனக்குக் குழந்தை பிறந்த போது கிடைத்த சந்தோஷத்தை விட அதிகம். முதல் படமாக குடும்பப் படத்தை இயக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். அக்காவைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக வரும் ஒருவர் த...
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
உசிலம்பட்டியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான ராமச்சந்திரனுக்குக் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அம்பிகாவுடன் நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ராமின் ராசிக்குக் கல்யாணமே ஆகாது என உறவினர்களும் ஊரார்களும் அவர் காதுபடக் கிண்டல் செய்தவண்ணம் இருக்க, அம்பிகாவுடனான திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் ராம். அவரது ராசியோ, விதியோ, இயற்கையோ, இயக்குநரின் திரைக்கதையோ ஏதோ ஒன்று விளையாட, குடும்பத்துடன் கோபிச்செட்டிப்பாளையத்திலேயே லாக்டவுனில் சிக்கிக் கொள்வதோடு கல்யாணமும் நின்று விடுகிறது. 90'ஸ் கிட்டான ராமின் வேதனை ஒரு முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதுதான் படத்தின்முடிவு. கலகலப்பான படத்தின் முதற்பாதி ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் 90'ஸ் கிட்களுக்கே உரித்தான சோதனை நாயகன் ராமைப் போட்டு வாட்டுகிறது. ராமின் வேதனை பொறுக்காமல் அம்பிகாவின் தங்கை ராதா, ராமின் மீது காத...
Love Marriage | 90’ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை எதிரொலிக்கும்

Love Marriage | 90’ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை எதிரொலிக்கும்

சினிமா, திரைச் செய்தி
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு  - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான முருகானந்தம், ''இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்தில் நடிக்க தொடங்கி நிறைவை எட்டிய போது, ஆஹா! படத்தின் படப்ப...