
Insidious: Out of the Further விமர்சனம்
இன்சிடியஸ் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் பரவித் தீங்கு விளைவிக்கும் எனப் பொருள் கொள்ளலாம்.
இன்சிடியஸ் படத்தொடரில் மொத்தம் ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ளன. ஆறாவது பாகமான இப்படம், 2023 இல் வெளிவந்த தி ரெட் டோர் படத்தின் தொடர்ச்சி என்றாலும், தனிப்படமாகப் பாவிக்கும்படியே கதை அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆவி வாழும் இடத்திற்கு ‘தி ஃபர்தர்’ எனப் பெயர். அமானுஷ்யமான ஒரு சிவப்புக் கதவினைத் திறந்தால், பூமியில் இருந்து ‘தி ஃபர்தர்’க்குச் சென்றுவிட முடியும். முந்தைய பாகத்து நாயகனுக்கு அத்தகைய சிவப்புக் கதவினாலே பிரச்சனைகள் எழும். ஃபர்தரில் சிக்கிக் கொள்ளும் தனது மகனைக் காப்பாற்றுவதற்காக நாயகன் பேட்ரிக் வில்ஸன் அரும்பாடுபடுவார். காப்பாற்றியதும் அந்தக் கதவை நிரந்திரமாக அடைப்பார்கள்.
ஒரு கதவு மூடினால் இன்னொரு சிவப்புக் கதவு திறக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் தொடக்கம். பல் மருத்துவரான கெம்மா ஹாலிற...


