Aim For SEVA | ஆட்டிச நிலையாளர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவை
சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு மாதத்தைக் குறிக்கும் 6 ஏப்ரல் 2024 அன்று, மாண்புமிகு தமிழக ஆளுநர் ஸ்ரீ ஆர்.என்.ரவி அவர்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Aim for Seva - சுவாமி தயானந்த க்ருபா இல்லத்தின் (கிருபா) வளாகத்திற்குச் சென்று குடியிருப்புகள், மருத்துவ நிலையம், பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல புதிய வசதிகளைத் திறந்து வைத்தார். அவருடன், நிர்வாக அறங்காவலரான திருமதி ஷீலா பாலாஜி, ஸ்வாமி சாக்ஷாத்க்ருதானந்த சரஸ்வதி மற்றும் திரு. ரவீ மல்ஹோத்ரா (அறங்காவலர்கள்- Aim for Seva), புத்தி கிளினிக் நிறுவனரும் மருத்துவருமான எண்ணபாடம் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர். மாண்புமிகு ஆளுநர் தனது உரையில், நீண்ட கால பராமரிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அத்தகைய குழந்தையின் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மனதில் எழுப்பும் கேள்வி, "எனக்குப் பிறகு என்ன?" என்பதைச் சுட்டிக் காட்டினார். இந்தச் சூழலில், இந்த வசதியை முன்...