Shadow

Tag: பாலா

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

சினிமா, திரைச் செய்தி
மாருதி ப்லிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “DEVIL” . சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்ற...
இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சூர்யா 41

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சூர்யா 41

சினிமா, திரைத் துளி
அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா 41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://twitter.com/Suriya_offl/status/1529742532791238657?s=20&t=0VRPPjoh8KUtaJS8KluL3A தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ்த் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான ‘நந்தா’, ‘பிதாமகன்’ என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியைக் குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களைப் பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலைத் தூண்டியத...
மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி

மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி

சினிமா, திரைச் செய்தி
பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா - சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 ஆவது படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மென்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.'நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் ம...
தாரை தப்பட்டை விமர்சனம்

தாரை தப்பட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளையராஜாவின் இசையில் வந்திருக்கும் 1000வது படம் என்ற வரலாற்றுச் சிறப்பினைப் பெற்ற படம். சன்னாசி கரகாட்டக் குழு, அதன் பிரதான ஆட்டக்காரி சூறாவளி இல்லாமல் நொடிந்து போகிறது. சூறாவளிக்கு என்னானது என்பது தான் படத்தின் கதை. சூறாவளி என்ற கதாபாத்திரத்தின் பெயருக்கு ஏற்ப வரலட்சுமி அசத்தியுள்ளார். முதல் பாதி படத்தைத் தனியொருவராகச் சுமக்கிறார். சன்னாசி மீது அவர் வைத்திருக்கும் காதல் பிரம்மிப்பூட்டுகிறது. அதை வரலட்சுமி மிக ஆர்ப்பாட்டமாக முன் வைக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல் இவர் தோன்றும் காட்சிகள் மட்டுமே! படத்தின் நாயகனான சன்னாசியை விட அவரது தந்தையாக வரும் சாமி புலவர் ஈர்க்கிறார். சன்னாசியாக சசிகுமாரும், சாமி புலவராக G.M.குமாரும் நடித்துள்ளனர். கரகாட்டக் குழுவினர் எதிர்கொள்ளும் வறுமையை ஊறுகாய் போல் தொட்டுச் சென்றுள்ளார் பாலா. பாலாவின் படங்களுடைய தீவிரத்தன்மையை, படம் நெடுகே வரும் மெல்லிய எள்ளல்கள் ...
‘நானும் பிசாசு.. அவனும் பிசாசு..’ – மிஷ்கின் பற்றி பாலா

‘நானும் பிசாசு.. அவனும் பிசாசு..’ – மிஷ்கின் பற்றி பாலா

சினிமா, திரைத் துளி
"என்னுடைய பாலா. ஒரு கலைஞன் கஷ்டத்தில் இருக்கும்போது கை கொடுத்துத் தூக்கிவிட்டார் பாலா. நான் என்னை கலைஞனென தைரியமாகச் சொல்வேன். ஏன்னா உழைப்பைக் கொட்டுறேன். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பார்த்துட்டு, அழுதுட்டே வெளில வந்தார் பாலா. என் ஆஃபீஸ் வரை காரை ஓட்டுடான்னு சொன்னார். அடுத்து என்னப் பண்ணப் போறேன்னு கேட்டார். நாளைக்கு வா படம் ஆரம்பிக்கலாம் என்றார். பிசாசு, டாம்பீகமற்ற எளிமையான படம். ஒரு பெண் இறந்து பிசாசாகி விடுகிறாள். கதை எழுதும்போது, நான் பேரலலாக (parallel) தமிழ்ப் படம், ஆங்கிலப் படம், உலகப் படம், ஹாரர் ஸ்டோரீஸ், கோஸ்ட் (ghost) கதை எழுத தனியாக ஸ்க்ரீன்-ப்ளே புக்ஸ் படிச்சேன். அதிலிருந்து ellam விலகி, நான் ஸ்க்ரிப்ட் எழிதியிருக்கேன். தமிழ் சார்ந்து, உறவு சார்ந்து இருக்கும்" என்றார் மிஷ்கின். "மிஷ்கின் சார் என் குரு. பாலா சார் தயாரிப்பில் அறிமுகமாவது ரொம்ப பெருமையாக இருக்கு" என்றார் அறிம...
பரதேசி விமர்சனம்

பரதேசி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இன்னுமொரு படமென ஒதுக்க முடியாதவைகளே பாலாவின் படைப்பு. மீண்டும் அதை, முன்பை விட அழுத்தமாக உணர்த்துகிறது 'பரதேசி'. லட்சணமாய்ப் பார்த்துப் பழகிய நாயகன் முகத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு அழுக்குப்படுத்தி விடுவார் பாலா. அத்தகைய நாயகனின் பிம்பம் கொண்டு பார்வையாளர்கள் மீது முதல் தாக்கத்தினை ஏற்படுத்துவார். அந்த அழுக்கு முகம் கொண்ட நாயகர்கள், மற்ற தமிழ்ப்பட நாயகர்களைப் போல சராசரியானவர்களே. உதாரணம் ஷங்கரின் நாயகர்களுக்கு லஞ்சம் வாங்குவதும், பேரரசின் நாயகர்களுக்கு ரவுடியிசமும் பெருங்குற்றம். பாலாவின் நாயகர்களுக்குத் தங்களை ஆதரவளிப்பவர்களைக் கொன்றால் பெருங்குற்றம். 'பாவத்தின் சம்பளம் மரணம்' என்பதே பெரும்பாலான தமிழ்ப்படங்கள் முன் வைக்கும் நீதி, நியாயம், தர்மம் இத்யாதி எல்லாம். சமீபத்திய விதிவிலக்கு: வத்திக்குச்சி. "எது பாவம்?" என்று நிர்ணயிப்பதில் மட்டுமே இயக்குநர்கள் மாறுபடுகிறார்கள். நாயகர்க...