Shadow

Tag: Balle Vellaiya Thevaa

பலே சசிகுமார்

பலே சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
“மகளிர் மட்டும்-க்குப் பிறகு ஜாலியான சூழல் இருந்த படப்பிடிப்பு இங்கே தான் மீண்டும் அமைந்தது. டிமானிட்டைசேஷன், புயல், அம்மாவின் மறைவு என மக்கள் இந்த ஒரு மாதமாகப் பட்ட கஷ்டங்களை மறந்து குடும்பத்தோடு ரசித்து மகிழ நல்லதொரு காமெடிப் படம்” என்றார் சசிகுமாருக்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை ரோகினி. “அரிவாள், முரட்டு மீசை என ரத்தம் தெறிக்கிற சசிகுமாரைத் திரையில் பார்த்துட்டு, ‘நானோ காமெடி பீஸ்? எப்படி செட் ஆகும்?’ எனப் பயந்துக்கிட்டே ஷூட்டிங்கிற்குப் போனேன். ஆனா, நேரில் ரொம்ப அமைதியானவர். அவர் கம்பெனில பேமென்ட் எல்லாம் வீடு தேடி சரியாக வந்துடுது. வருஷத்துக்கு கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் 10 படம் பண்ணணும். அத்தனையிலும் எனக்கு வாய்ப்புக் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன்” என்றார் கோவை சரளா. “இந்தக் கதையை சோலை பிரகாஷ் சொன்னதும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதில் வரும் பாட்டி கேரக்டரைப் பண்ணக் கூடியவர்கள் இரண்டு ...