‘பீஷ்மரை இகழ்தல் இலமே!’ – கர்ண சுபாவம்
கர்ணன் சிறந்த நண்பனா?
கர்ணன் படத்தில் ஒரு காட்சி வரும். களத்தில் பீஷ்மர் வீழ்ந்திருக்கிறார். கர்ணன் ஓடி வந்து கேட்கிறான்.
"ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா? வீரத்தின் விளை நிலம் தரிசாகிப் போனதா? பகை குணத்தால் உம்மோடு துணை நில்லாமல் நம்முள் புரையோடச் செய்துவிட்டேனே! என்னை மன்னித்துவிடுங்கள்" என பீஷ்மரிடம் கேட்கிறான் கர்ணன். எப்பொழுது? பத்தாவது நாள் போரின் முடிவில்.
பீஷ்மரும் பெருந்தன்மையாக, "கர்ணா விதி வலியது. சென்றதை மற. வீரனே உன்னை நான் ஒதுக்கியதன் உள் நோக்கம் நீ அறியாய். மஹாரதி கர்ணன் என்ற மதிப்புக்கு உரியவன் நீ. உன்னை வெல்ல வல்லவன் யாரும் இல்லை. எத்தனைப்பேர் இறப்பினும் எனக்குக் கவலை இல்லை. ஒரு சூதும் அறியாத இந்தத் துரியோதனனை கடைசி வரை உடனிருந்து காத்துத் தரவேண்டும் என்ற காரணத்திற்காக உன்னைத் தனியாக ஒதுக்கி வைத்தேன். வீரனல்லவா நான்? வீரத்தை வீரம் அவமதிக்குமா கர்ணா?" ...