Shadow

‘பீஷ்மரை இகழ்தல் இலமே!’ – கர்ண சுபாவம்

Karna-n-bheeshma

கர்ணன் சிறந்த நண்பனா?

கர்ணன் படத்தில் ஒரு காட்சி வரும். களத்தில் பீஷ்மர் வீழ்ந்திருக்கிறார். கர்ணன் ஓடி வந்து  கேட்கிறான்.

“ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா? வீரத்தின் விளை நிலம் தரிசாகிப் போனதா? பகை குணத்தால் உம்மோடு துணை நில்லாமல் நம்முள் புரையோடச் செய்துவிட்டேனே! என்னை மன்னித்துவிடுங்கள்” என பீஷ்மரிடம் கேட்கிறான் கர்ணன். எப்பொழுது? பத்தாவது நாள் போரின் முடிவில்.

பீஷ்மரும் பெருந்தன்மையாக, “கர்ணா விதி வலியது. சென்றதை மற. வீரனே உன்னை நான் ஒதுக்கியதன் உள் நோக்கம் நீ அறியாய்.  மஹாரதி கர்ணன் என்ற மதிப்புக்கு உரியவன் நீ. உன்னை வெல்ல வல்லவன் யாரும் இல்லை. எத்தனைப்பேர் இறப்பினும் எனக்குக் கவலை இல்லை. ஒரு சூதும் அறியாத இந்தத் துரியோதனனை கடைசி வரை உடனிருந்து காத்துத் தரவேண்டும் என்ற காரணத்திற்காக உன்னைத் தனியாக  ஒதுக்கி வைத்தேன். வீரனல்லவா நான்? வீரத்தை வீரம் அவமதிக்குமா கர்ணா?” என்பதாக நீளும் அந்தக் காட்சி.

இவ்வசனமும் காட்சியும் பீஷ்மரை அவமதிக்கும் செயலாகும்.  பீஷ்மர் பல நேரத்தில் கர்ணனின் வீரத்தை அவன் எதிரிலேயே உரிய காரணத்தோடு மறுத்திருக்கிறார்.  மேலும் அவனை வெறுத்தார்.

கர்ணனை  பீஷ்மர் வெறுத்தாரா? ஏன்?

ஆம், கர்ணனை பீஷ்மர் வெறுத்தார். நிறைய காரணங்கள் உண்டு. 

கர்ணன் துணையை நம்பித்தான் பாண்டவர்களை எதிர்க்கும் திறன், முக்கியமாக அருச்சுனனை எதிர்க்கும் திறன், தம்மிடம் இருப்பதாகத் துரியோதனன் நம்பினான். அதனாலேயே அவன் எல்லா விதத்திலேயும் பாண்டவர்களை எதிர்த்துக் கடைசியில் போருக்கும் தயாரானது, கர்ணன் என்ற ஒரே ஓர் ஆளுமையை நம்பி மட்டுமே. 

அது மட்டுமே இல்லை. பெரியவர்கள், அவர்கள் வயது என்று எதையும் பார்க்காது கிருபர், துரோணர், பீஷ்மர் என  அனைவரையும் கர்ணன் அவமதித்திருக்கிறான் பல இடங்களில்.

துரியோதனனின் உயிருக்கு உலை வைக்கும் பல செயல்களை அவன் செய்திருக்கிறான் என்பதை முன்பே பார்த்தோம். முக்கியமாகக் கந்தர்வர்களிடம்  துரியோதனனை சிக்க வைத்துவிட்டு கர்ணன் தப்பிச் சென்றது.

வீண்பேச்சும், வெற்று ஜம்பமும் அதிகம் கொண்டவன் கர்ணன். அவன்  அருச்சுனன் உடனான எந்தப் போரிலும் வெற்றியைக் கண்டவனில்லை.  கடைசிப் போர் தவிர்த்து மற்ற நேரங்களில் புறமுதுகிட்டு ஓடியவன்.

பீஷ்மர் பலமுறை சொல்லியும் சம்பந்தமே இல்லாமல்  துரியோதனன் நண்பன் என்னும் ஒரே காரணத்தால் அரசியல் விவகாரங்களில் தலையிட்டிருக்கிறான். கிருஷ்ணன்   சமாதானம் பேச வந்த போது துரியோதனன் பீஷ்மரையும்  மீறிப் போருக்கு ஒப்புதல் அளித்ததற்குக் கர்ணனே முக்கிய காரணம்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல  குருவம்சத்தின் குலமகளைச்  சான்றோர்கள் நிறைந்த அரசவையில் துகிலுரிக்கச் சொன்னவனை பீஷ்மரால் எப்படி ஏற்க இயலும்  ?

ஆனாலும் பீஷ்மர்   அம்புப் படுக்கையில் வீழ்ந்திருந்த போது தன்னைச் சந்திக்க கர்ணனை அனுமதித்தார்.

Bhishma Parva – Section CXXIV

பீஷ்மர் அவனை வெறுத்ததற்காக  இங்கே சொல்லும் காரணங்கள்,   அந்நிலையில் மேலும் பகையுணர்வும் கோபமும் கர்ணன் மீது கொள்ளக்  கூடாது என்பதற்காக மட்டுமல்ல,  குந்தியின் மைந்தன் இவ்வாறு செய்கிறானே எனும்  கோபமாகவும் அதைக் கொள்ள வேண்டும்.  பீஷமரே சொல்கிறார் கர்ணன் குந்தியின் மைந்தன் என்பது தனக்குத் தெரியும் என்பதை.

//he son of Ganga, whose eyes were covered with film slowly raising his eyelids, and causing the guards to be removed, and seeing the place deserted by all, embraced Karna with one arm, like a sire embracing his son, and said these words with great affection:–Come, come! Thou art an opponent of mine who always challengest comparison with me! If thou hadst not come to me, without doubt, it would not have been well with thee! Thou art Kunti’s son, not Radha’s! Nor is Adhiratha thy father! O thou of mighty arms, I heard all this about thee from Narada as also from Krishna-Dwaipayana! Without doubt, all this is true! I tell thee truly, O son, that I bear thee no malice! It was only for abating thy energy that I used to say such harsh words to thee! //

“உன் மீது எனக்கு வெறுப்பில்லை. உன் சக்தியைக் குறைப்பதற்காகவே அப்படிப் பேசினேன். நீ ராதையின் மகனல்ல. அதிரதனும் உன் தந்தை அல்ல என்பது எனக்குத் தெரியும்.  நீ குந்தியின் மகன். நாரதரிடமும், வியாசரிடமும் இது குறித்துப் பேசி இருக்கிறேன். அது உண்மை என்பதில் எனக்கு ஐயம் இல்லை” என்று ஆறுதல் வார்த்தைகளாகப் பேசுகிறார்.

இதுவரைக்கும் சரி. ஆனால் இதற்கப்புறம் அவன் மீதான குற்றங்களை மீண்டும்  தொடர்ந்து எடுத்து வைக்கிறார்.

//O thou of excellent vows without any reason thou speakest ill of all the Pandavas! Sinfully didst thou come into the world. It is for this that thy heart hath been such. Through pride, and owning also to thy companionship with the low, thy heart hateth even persons of merit! It is for this that I spoke such harsh words about thee in the Kuru camp! I know thy prowess in battle, which can with difficulty be borne on earth by foes! I know also thy regard for Brahmanas. thy courage, and thy great attachment to alms-giving! O thou that resemblest a very god, amongst men there is none like thee! For fear of intestine dissensions I always spoke harsh words about thee. In bowmanship, in aiming weapon, in lightness of hand and in strength of weapons, thou art equal to Phalguni himself, or the high-souled Krishna! O Karna, proceeding to the city of Kasi, alone with thy bow, thou hadst crushed the kings in battle for procuring a bride for the Kuru king! The mighty and invincible king Jarasandha also, ever boastful of his prowess in battle, could not become thy match in fight! Thou art devoted to Brahmanas; thou always fightest fairly! In energy and strength, thou art equal to a child of the celestials and certainly much superior to men. The wrath I cherished against thee is gone. Destiny is incapable of being avoided by exertion. O slayer of foes, the heroic sons of Pandu are thy uterine brothers! If thou wishest to do what is agreeable to me, unite with them, O thou of mighty arms! O son of Surya, let these hostilities end with me! Let all the kings of Earth be to-day freed from danger!–//

“நீ காரணமே இல்லாமல் பாண்டவர்களை இழிவாகப் பேசுகிறாய்.  நீ பாவத்தின் காரணமாக இந்த உலகத்தில் தோன்றி இருக்கிறாய். அதனால் தான் உன் இதயம் அப்படி இருக்கின்றது.   அகங்காரத்தாலும், தீய தோழமையினாலும்  நீ தகுதி வாய்ந்த மனிதர்களையும் வெறுக்கிறாய்.  அதனாலேயே உன்னை நான் அவையில்  கடும் வார்த்தைகளைக் கொண்டு பேசினேன்.

உன் பேராற்றலை நான் அறிவேன்,  எதிரிகள் உன்னைத் தாங்க மாட்டார்கள்.  நீ வில்லாற்றலில் கண்ணனுக்கும் அருச்சனனுக்கும் சமமானவன். போரில் ஜராசந்தனையே வென்றவன்.  நீ அருச்சனனுக்கு இணையானவன்.  உனக்கு எதிரான கோபம் தணிந்து விட்டது.   நீ எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பினால் பாண்டவர்களுடன் சேர்ந்து விடு. அவர்கள் உனக்குச் சகோதரர்கள்.  இந்தப் பகை உணர்ச்சி என்னோடு முடியட்டும்.  பூமியில் மன்னர்கள் ஆபத்தில் இருந்து விடுபடட்டும்” என்கிறார்.

பீஷ்மர் அவனின் நிலையற்றத்தன்மையை எடுத்துக் கூறியது மட்டும் இல்லாமல், இறக்கும் தருவாயில் கூட அவனுக்கு அவனுடைய குணத்தை எடுத்துரைக்கிறார். அவன் பாவத்தின் காரணமாகவும்,  தீய நட்பையும் எடுத்துரைக்கிறார்.

கர்ணன்  சொல்லுவதையும் இந்த இடத்தில் பார்க்க வேண்டும் (இங்கே கொஞ்சம் நட்புணர்ச்சியோடு கர்ணன் பேசினான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்).

// பீஷ்ம பர்வம்

கர்ணன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, இதை நான் அறிவேன். இவை யாவிலும் (நீர் சொல்வதைப் போலவே) ஐயமில்லை. நீர் என்னிடம் சொல்வதைப் போலவே, ஓ! பீஷ்மரே, நான் குந்தியின் மகனே, சூதர் ஒருவரின் மகனல்ல. எனினும், நான் குந்தியால் கைவிடப்பட்டு, சூதர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வந்தேன். (இவ்வளவு நெடுங்காலத்திற்கு) துரியோதனனின் செல்வத்தை அனுபவித்த நான், அஃதை இப்போது பொய்யாக்கத் துணியேன்.

பாண்டவர்களுக்காக உறுதியாகத் தீர்மானம் செய்திருக்கும் வசுதேவரின் மகனை {கிருஷ்ணனைப்} போல, ஓ! பிராமணர்களுக்கு அபரிமித கொடியளிப்பவரே {பீஷ்மரே}, துரியோதனனுக்காக, என் உடைமைகள், என் உடல், என் பிள்ளைகள், மனைவி ஆகியோரையும் கைவிட நான் தயாராகவுள்ளேன். ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நோயால் மரணம் க்ஷத்திரியருக்குரியதில்லை. துரியோதனனைச் சார்ந்தே நான் எப்போதும் பாண்டவர்களை அவமதித்து வந்தேன். இக்காரியங்கள் அதன் வழியில் செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாததாகும்.

முயற்சியால் விதியை வெல்லத் துணிந்தவர்கள் {இதுவரை} யார் இருந்துள்ளனர்? ஓ! பாட்டா {பீஷ்மரே}, பூமியின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் உம்மால் காணப்பட்டு, சபையிலும் அறிவிக்கப்பட்டது. அந்தப் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்} பிற மனிதர்களால் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை நான் நன்கறிவேன். அவர்களோடே நாம் போரிடத் துணிகிறோம். போரில் நான் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வீழ்த்துவேன். இதுவே என் உறுதியான தீர்மானமாகும்.

(பாண்டவர்களுக்கு எதிரான) இந்தக் கடும் பகையைக் கைவிட இயன்றவனாக நான் இல்லை. மகிழ்ச்சியான இதயத்துடனும், என் வகையின் கடமைகளை என் கண் முன் கொண்டும், நான் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்ப்பேன். ஓ! வீரரே {பீஷ்மரே}, போரில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கும் எனக்கு உமது அனுமதியைக் கொடுப்பீராக. நான் போரிடுவேன். இதுவே என் விருப்பமாகும். எப்போதாவது நான், கோபத்தாலோ, சிந்தனையற்ற தன்மையினாலோ உமக்கு எதிராகக் கடுஞ்சொற்களைப் பேசியிருந்தாலும், எந்தச் செயலையாவது உமக்கெதிராகச் செய்திருந்தாலும் என்னை நீர் மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றான் {கர்ணன்}. //

இதைக் கேட்டதும் பீஷ்மர் அவனைப் போரிட அனுமதித்து  அவனுக்கு அறிவுரையும் கூறுகிறார். 

//நேர்மையான போரைத் தவிர, வேறெதிலும் க்ஷத்திரியன் ஒருவனுக்குப் பெருமகிழ்ச்சி இல்லை என்பதால், செருக்கிலிருந்து விடுபட்டு, உன் பலம் மற்றும் சக்தியை நம்பி போரில் ஈடுபடுவாயாக. அமைதியை ஏற்படுத்த நான் நீண்ட காலம் பெருமுயற்சிகளைச் செய்தேன். ஆனால், ஓ! கர்ணா, நான் அந்தப் பணியில் வெல்லவில்லை. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {பீஷ்மர்}.//

பீஷ்மர் ஆரம்பத்தில் இருந்து  உண்மையாகவும் கர்ணனை முழுதும் அறிந்தவராகவும், அவனின் வீரத்தை உள்ளபடியே அறிந்தவர் ஆகையால் அவனை அர்த்தரதானக நியமித்தார்.  அவனின் தீய குணங்களை அறிந்ததால் அவனை வெறுத்தவறாகவும் இருந்தார்.  பீஷ்மர் துரியோதனனுக்காகக் கர்ணனைத் தனியாக ஒதுக்கி வைத்ததார் எனச் சொல்லப்படுவதெல்லாம் புருடா. அவ்ளோ தான்.

– ஐயப்பன் கிருஷ்ணன்