
பில்லா பாண்டி விமர்சனம்
அஜீத்தின் தீவிர ரசிகர் பில்லா பாண்டி. அவரும், அவரது அத்தை மகள் சாந்தினியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, பாண்டியை ஒருதலையாகக் காதலிக்கும் இந்துஜாவால் பாண்டிக்கு மிகப் பெரும் பிரச்சனை எழுகிறது. சூழ்நிலைகள்மிக மோசமாகி, 'தல'ச்சாமியின் அருள் அவரை எப்படிக் காப்பாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் கதை இடைவேளையில் தான் தொடங்குகிறது. அதுவரை, மேஸ்திரியாக வரும் தம்பி ராமையாவின் 'மீ டூ' அத்தியாயங்கள் கொலையாகக் கொல்கிறது. 'கருப்பட்டி மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் போதும். யாரை வேண்டுமானாலும் சம்மதிக்க வைத்துவிடுவேன்' என படத்தின் 35% நீளம் அவருக்காக மட்டுமே ஒதுக்கப்படுகிறது. படத்தின் நீளம் குறைந்தாலும் பரவாயில்லையென, நகைச்சுவை என்ற பெயரில் தம்பி ராமையா செய்யும் அசட்டுத்தனங்களைக் கத்தரித்து எறிந்திருக்க வேண்டும் படக்குழு. காமெடியனுக்கும், வில்லனுக்கும் கேரக்டர் டீட்டெயிலிங்கில் பெரிய வித்தியாசம...