Shadow

Tag: BOAT Tamil movie review in Tamil

BOAT விமர்சனம்

BOAT விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சென்னை மீது ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்ற தகவலால் பதற்றத்துக்கு உள்ளாகின்றனர் மக்கள். கடலுக்குள் சென்று தப்பிக்கலாம் என குமரனின் துடுப்புப்படகில் சிலர் ஏறிக் கொள்கின்றனர். கரையில் இருந்து 12 மைல் தொலைவு கடலுக்குள் சென்று விட்டால், ஆங்கிலேயரின் ரோந்து படகு தொல்லையில் இருந்தும், வானில் இருந்து குண்டு வீசப்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்து விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை.அத்துடுப்புப்படகில் நூலகர் முத்தையா, மயிலாப்பூர்வாசி நாராயணன், அவரது மகள் லட்சுமி, பாலக்காட்டு முகமது ராஜா, விஜயவாடா விஜயா, அவரது மகன் மகேஷ், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட லால் சேட்டு, துடுப்புப்படகுக்காரர் குமரன், குமரனின் பாட்டி முத்துமாரி ஆகியோர் உள்ளனர். பாதி வழியில் இர்வின் எனும் வெள்ளைக்காரரும் அப்படகில் அழையாத வேண்டா விருந்தாளியாகச் சேர்ந்து கொள்கிறார். இவர்களுடன் படகிற்குள் ஒரு எலி, படகிற்கு வெளியே ஒரு சுறா...