
பெளவ் பெளவ் விமர்சனம்
ஒரு சிறுவனுக்கும், அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள நேசம் பற்றிய கதை.
110 நிமிடப் படம். முதற்பாகத்தில் சிறுவனும், இரண்டாம் பாகத்தில் நாயும், கதையை நகர்த்தும் பிரதான பாத்திரங்களாக உள்ளனர்.
லண்டன் டாக்கீஸ் K.நடராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள்தான். மாஸ்டர் அஹான், அவனது தாத்தா பாட்டி, எதிர் வீட்டில் வசிக்கும் ஓர் அங்கிள் ஆன்ட்டி.
அஹான் பிறந்தவுடனே அவனது பெற்றோர் இறந்துவிடுதால், அதிர்ஷ்டம் கெட்டவன் என அவனது வகுப்பில் பயிலும் ஒரு மாணவனின் அம்மாவால் முத்திரை குத்தப்படுவதால், அவனை நண்பர்களாக ஏற்க யாரும் முன் வருவதில்லை. பள்ளிக்குப் போகும் வழியிலோ, போகும் பொழுதும் வரும் பொழுதும் தெரு நாய் ஒன்றின் தொந்தரவு. இவையனைத்தும் அஹானை எப்படிப் பாதிக்கின்றன என்பதும், எதிர்வீட்டு தம்பதியின் காதல் கதையும் படத்தின் முதற்பாதி.
எதிர்வீட்டு அங்கிள் - ஆன்ட்டியாகவும், காதல் திருமண...