32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பெளவ் பெளவ் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 18/10/2019 2 நிமிட வாசிப்பு Updated: 13/02/2020 சினிமா
எழுத்து அளவு:

bow-bow-movie-review

ஒரு சிறுவனுக்கும், அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள நேசம் பற்றிய கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

110 நிமிடப் படம். முதற்பாகத்தில் சிறுவனும், இரண்டாம் பாகத்தில் நாயும், கதையை நகர்த்தும் பிரதான பாத்திரங்களாக உள்ளனர்.

லண்டன் டாக்கீஸ் K.நடராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள்தான். மாஸ்டர் அஹான், அவனது தாத்தா பாட்டி, எதிர் வீட்டில் வசிக்கும் ஓர் அங்கிள் ஆன்ட்டி.

அஹான் பிறந்தவுடனே அவனது பெற்றோர் இறந்துவிடுதால், அதிர்ஷ்டம் கெட்டவன் என அவனது வகுப்பில் பயிலும் ஒரு மாணவனின் அம்மாவால் முத்திரை குத்தப்படுவதால், அவனை நண்பர்களாக ஏற்க யாரும் முன் வருவதில்லை. பள்ளிக்குப் போகும் வழியிலோ, போகும் பொழுதும் வரும் பொழுதும் தெரு நாய் ஒன்றின் தொந்தரவு. இவையனைத்தும் அஹானை எப்படிப் பாதிக்கின்றன என்பதும், எதிர்வீட்டு தம்பதியின் காதல் கதையும் படத்தின் முதற்பாதி.

எதிர்வீட்டு அங்கிள் – ஆன்ட்டியாகவும், காதல் திருமணம் புரியும் தம்பதியாகவும் V.சிவா – தேஜஸ்வி நடித்துள்ளனர். பல நாடுகளில் விருதுகள் வாங்கிய இப்படத்தை S. பிரதீப் கிளிக்கர் இயக்கியுள்ளார். சிறுவனின் அக உலகம் சரியாகப் பதியப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறியே! தாத்தா, பாட்டியாக நடித்திருக்கும் சத்யனும் ஷர்மிளாவும் கூட படம் நெடுகே வருவதில்லை.

முதற்பாதியை விட இரண்டாம்பாதி என்கேஜிங்காக உள்ளது. நாய் பயிற்சியாளர்களான K9 பாஸ்கரும், வரமணியும் சிறப்பான பங்களிப்பினை அளித்துள்ளார்கள். படத்தின் ஃப்ளாஷ்பேக்கில் வரும் செம ஆக்டிவான நாய்க்கும், சிறுவன் வளர்க்கும் நாயின் குணத்திற்கும் நல்ல வேறுபாட்டினைக் காட்டியுள்ளார்கள். டைட்டில் போடும் பொழுது வரும் 2டி அனிமேஷன், குழந்தைகளுக்கான செமயான ட்ரீட்டாக இருக்கும். ஆனால் அதன் பின் படம் கொஞ்சம் துவண்டு, முக்கியமாக ஃப்ளாஷ்பேக்கில் வரும் காதல் அத்தியாயத்தில் சுணக்கம் பெறும் படம், இரண்டாம் பாதியில் க்ளைமேக்ஸின் பொழுதே மீண்டும் பார்வையளர்களைக் கதைக்குள் இழுக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.