Shadow

Tag: Breaking News movie

பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய்

பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய்

சினிமா, திரைத் துளி
ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு வேகமாய் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஹை-லைட், ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதைப் படக்குழு உறுதிப்படுத்திகின்றனர். படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போது, “இந்தப் படம் ஜீவன் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. தொழில் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட வாழ்க்கை மிகச்சரியாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், அநீதிக்கு எதிராகத் தூண்டப்படும் அவரது நன்மை செய்யும் குணம் அவரைப் பிரச்சினையில் ஆழ்த்துகிறது. அவரை மிகவும் நேசிக்கும் அவரது மனைவி ஹரிபிரியா (பானு ஸ்ரீ) அவரைத் தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றுகிறார். ஆனால் அவரது மாறாத தன்மையால் அவரிடமிருந்து விலகுகிறார். அவரது சகாக்கள் ம...