32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய்

Dinesh R சேலம் Published: 19/06/2019 3 நிமிட வாசிப்பு Updated: 23/06/2019 சினிமா
எழுத்து அளவு:

Breaking-News---Super-Hero-Jai

ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு வேகமாய் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஹை-லைட், ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதைப் படக்குழு உறுதிப்படுத்திகின்றனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போது, “இந்தப் படம் ஜீவன் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. தொழில் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட வாழ்க்கை மிகச்சரியாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், அநீதிக்கு எதிராகத் தூண்டப்படும் அவரது நன்மை செய்யும் குணம் அவரைப் பிரச்சினையில் ஆழ்த்துகிறது. அவரை மிகவும் நேசிக்கும் அவரது மனைவி ஹரிபிரியா (பானு ஸ்ரீ) அவரைத் தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றுகிறார். ஆனால் அவரது மாறாத தன்மையால் அவரிடமிருந்து விலகுகிறார்.

அவரது சகாக்கள் மற்றும் நண்பர்கள் அவரது அன்னிய இயல்புக்காக அவரைக் கைவிடும்போது அவர் மேலும் தனிமையாகிறார். தனிமையால் சிதைந்துபோன அவர், கடவுள் தனக்கு வேறு சில திட்டங்களை வைத்திருப்பதை அறியாமல் எந்தவித நோக்கமுமின்றி அலைந்து திரிகிறார்.

விண்வெளியில் இருந்து ஒரு விண்கல் பூமியைத் தாக்கும் போது, ஒரு சிறு துகள் அவரது உடலில் துளைக்கும்போது எல்லாம் மாறி விடுகிறது. அவரது உயிரணுக்களில் விவரிக்க முடியாத வேதியியல் எதிர்வினைகள் நடந்து, அவரது திசுக்கள் பிறழ்ந்து, மூளையில் நியூட்ரான்கள் வினைபுரிவதால், அவர் ஒரு வெல்ல முடியாத சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். இப்போது தென்னிந்தியாவைப் பேரழிவிற்கு உட்படுத்த ஒரு மோசமான திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம், வளமான நிலங்களை அழித்து, அதன் மூலம் மக்களையும், வாழ்வாதாரங்களையும் அழிக்கத் திட்டமிடும் மிகவும் ஆபத்தான வில்லன்களான பூரி மற்றும் உராஜ் ஆகியோர் நுழைகிறார்கள்.

இந்த இரட்டையர்களை அரசாங்கத்தால் கூடத் தடுத்து நிறுத்த முடியாது, அவர்களை விட சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மனிதனாக இருந்து சூப்பர் ஹீரோவாக மாறிய ஜீவன், அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் என்பதாக கதை பயணிக்கிறது” என்றார்.

ஒரு திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே அதன் கதையை ஒரு இயக்குநர் வெளியே சொல்வது ஆச்சரியத்திலும் ஆச்சரியமானது சயிற்றே எனக் கேட்டால், “இங்கு மறைக்க எதுவும் இல்லை, சூப்பர் ஹீரோ கதைகள் உருவான காலத்தில் இருந்தே இந்த வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவை தான். நாங்கள் படத்தைத் தொழில்நுட்ப ரீதியிலும், கதை சொல்லலிலும் சுவாரசியாகச் சொல்லத் திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் நினைத்தபடியே உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து எங்களுக்கு முழு ஆதரவுடன் செயல்படும் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் சாருக்கே எல்லாப் பாராட்டுகளும் சேரும்” என்றார்.

பிரேக்கிங் நியூஸ் படத்தை ஒரு விஷுவல் ட்ரீட்டாகக் கொடுக்கும் நோக்கத்தில் மொத்த படக்குழுவும் கடினமாக உழைத்து வருகிறது. வி.தினேஷ் குமார் மேற்பார்வையில் 450 சிஜி கலைஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். ஜானி லால் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை நாகர்கோவில் திருக்கடல் உதயம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.