Shadow

Tag: C. Prem Kumar

கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம்

கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் விருது பெறும் ’96 ப்ரேம்

சினிமா, திரைத் துளி
ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகள் மட்டுமன்று. உணர்வுபூர்வமான சில தருணங்களும் கூட! தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து ‘96 படத்தைத் தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை இயக்குநர் ப்ரேம் பெற இருக்கிறார். தெலுங்கு சினிமா உலகம் மட்டும் இல்லாமல் மொத்த இந்தியத் திரையுலகமே இந்த விருதை மிகவும் உணர்வுபூர்வமான விசயமாகக் கருதுகின்றனர். அதற்கான காரணமும் இருக்கிறது. அது 1992-ம் ஆண்டு! தனது முதல்படமான 'பிரமே புஸ்தகம்' என்ற படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிருஷ்டவசமாகக் காலமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார். ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மரணம் தழுவிக்கொண்ட அந்தப...
’96 என்னுடைய கதை – இயக்குநர் ப்ரேம்குமார்

’96 என்னுடைய கதை – இயக்குநர் ப்ரேம்குமார்

சினிமா, திரைச் செய்தி
'96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், "இந்தக் கதை என்னுடையது தான். இந்தக் கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில், '96 என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்தக் கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்குப் பிறகு தயாரிப்பாள...
’96 விமர்சனம்

’96 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி தேவியும் உணர்ந்தாலும், அதைப் பரஸ்பரம் சொல்லிக் கொள்ளும் முன்பு ஒரேடியாகப் பிரிந்து விடுகின்றனர். சரியாக 22 வருடங்களுக்குப் பின், ஓர் ஒருங்குகூடலில் சந்திக்கின்றனர். அவர்கள் சந்தித்துக் கொள்ளும் ஓரிரவு, காலத்தை உறைய வைத்து, இசையாயக் கரைந்து, அவர்களோடு பார்வையாளர்களையும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடுகிறது. மனதில் பதிந்துள்ள மிக மென்மையான பதின் காலத்து இனிய நினைவுப் பொக்கிஷங்களைக் கச்சிதமாக மீட்டுகிறார் கோவிந்த் வசந்தா. இசையால் என்னென்ன மாயம் செய்யமுடியும் என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார். ஆனால், அப்படி க்யூட்டான பால்யம் வாய்க்கப் பெறாதவர்களுக்குக் கூட, அந்தக் குறுகுறுப்பான ஓர் இனிய அவஸ்தையை உண்டாக்கிவிடுவது தான் 96 படத்தின் சாதனை. பள்ளிப்பருவத்தில், ஜானகி பாடும் பாடல்கள் அனைத்தும் மிக அட்டகாசம். இளையராஜாவை ஏன் போன மில்லிய...