சார்லிஸ் ஏஞ்சல்ஸ் விமர்சனம்
கெலிஸ்டோ எனும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை ஆயுதமாக மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அவை திருடப்படுகின்றன. அது தீயவர்களின் கையில் சிக்காமல் தடுக்கின்றனர் சார்லிஸ் ஏஞ்சல்ஸ்.
தொலைக்காட்சித் தொடராகத் தொடங்கப்பட்ட பொழுது, கவர்ச்சியில் தாராளமாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. 2000 இலும், 2003 இலும், இத்தொடர் படமாக எடுக்கப்பட்ட பொழுது கேமரூன் டயஸ், ட்ரூ பேரிமோர், லூசி லியோ ஆகியோரையும் கூடக் கவர்ச்சிக்கென சில காட்சிகளில் பயன்படுத்தியிருந்தனர். 'இப்படத்தில் அத்தகைய குறைகள் இருக்காது' என இயக்குநர் எலிசபெத் பேங்க்ஸ் உறுதியளித்திருந்தாலும், படத்தின் தொடக்கக் காட்சிகளில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பெண் இயக்குநர் என்பதால், ஒரு பெண்ணின் பார்வையில், ஏஜென்ட்களாக இருப்பதின் சங்கடங்கள் போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். தயாரிப்பாளர்களில் ஒருவராகக் களமிறங்கியதோடு, திரைக்கதையையும் எழுதியுள்ள...