Shadow

Tag: Chekka Chivantha Vaanam thirai vimarsanam

செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா எனப் பன்முகம் கொண்ட சேனாபதியின் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, அவரது மூன்று மகன்களுக்குள் வாரிசுப் போட்டி நடக்கிறது. அதனால் சிந்தப்படும் ரத்தத்தால், சேனாபதி சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த வானம் சிவக்கத் தொடங்குகிறது. போட்டிப் போட்டுக் கொண்டு சிவக்க வைத்துள்ளனர் அரவிந்த் சுவாமி, அருண் விஜய் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர். கதாபாத்திரங்கள் தேர்வு கனகச்சிதம் என்றால், அவர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும், மெல்ல கதைக்குள் இழுத்த யுக்தியிலும் மணிரத்னம் அசத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி செம கிளாஸாக, மணிரத்னத்திற்கே உரித்த ஸ்டைலிஷான ஃப்ரேமிங்கால் கவர்கிறார். கேங்ஸ்டர் படத்திற்கான அமர்க்களமான அஸ்திவாரத்தைப் போட்டு விடுகிறார். தலைக்கட்டு சாய்வதோடு முதல் பாதி முடிய, 'மணிரத்னம் இஸ் பேக்டா (backda)' என்ற பரவச குரல்களைக்...