
சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி
எழும்பூரில் உள்ள பழைய கமிஷ்ணர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர் பயிற்சி நடத்தப்படுகிறது. கிளப்பில் முன்பதிவு அடிப்படையில் மாணவ உறுப்பினர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிளப் அதன் தலைவர் காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் தலைமையிலும், துணைத் தலைவர் திரு. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையிலும் இயங்குகிறது.
கௌரவ செயலர் ராஜசேகர் பாண்டியன் கூறும்போது, "துப்பாக்கிச் சுடுதலை கற்றுக் கொண்டு அதில் சிறந்து விளங்க ஆர்வம் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. இந்த மாணவர் பயிற்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே, துப்பாக்கிச் சுடுதல் என்பது ஒரு எட்டாக்கனி என்ற கருத்தை மாற்றத்தான். இந்த விளையாட்டை அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக ஆக்குவதே இந்தப் ...