சென்னை Vs கொச்சி – புரோ கைப்பந்து லீக் அரையிறுதிப் போட்டி
நாளை நடைபெறும், இந்தியாவில் நடைபெறும் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி.
பங்குபெறும் ஆறு அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிஇன் உரிமையாளர்கள், கல்ஸ் குரூப் என்ற நிறுவனமும், ஸ்ரீ ப்ராகரசிவ் புராஜெக்ட்ஸ் என்ற நிறுவனமும் ஆகும்.
ப்ரோ கைப்பந்து லீக் என்ற கைப்பந்து போட்டியை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தப் போட்டிக்கு 6 அணிகள் தேர்வாகியுள்ளன. அந்த ஆறு அணிகளும் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லீக் போட்டிகளில் மோதுகின்றன. .
சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, மிகவும் திறமையான, இளமையான, அனுபவமிக்க வீரர்களைக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவமும் பெற்றவர்கள். இவர்களுடன் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தன்னுடைய குழுவி...