சென்னை2சிங்கப்பூர் விமர்சனம்
மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அப்பாஸ் அக்பர். சிங்கப்பூர் அரசின் மீடியா டெவலப்மென்ட் வாரியமும் (MDA), தமிழ்த் திரையுலகமும் கை கோர்த்துள்ள முதற்படமிது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநராகும் கனவில் ஹரீஷ் சென்னையில் இருந்து சிங்கப்பூர் பயணிக்கிறான். அங்கு அவனுக்கு என்ன நடந்தது என்றும், நினைத்தது போல் திரைப்படம் இயக்கினானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
நாயகன் கோகுல் ஆனந்த பல ஃப்ரேம்களில் துல்கரை ஞாபகப்படுத்தும் சாடையில் உள்ளார். ஏமாற்றப்படும் கோபத்தில் அவர் செய்யும் ஒரு காரியம், அவரது ஃப்யூச்சரைத் தலைதெறிக்க ஓடச் செய்கிறது. ஆம், ஃப்யூச்சரே (எதிர்காலம்) தான். ஃப்யூச்சர்கள் எனப் பன்மையில் கூடச் சொல்லலாம். அவரது கனவு அவரை விட்டு தூரம் செல்கிறது எனப் படத்தின் தொடக்கமே காமிக்கலாகக் காட்டப்படுகிறது. “யார்றா இவன்? எங்கிருந்துடா வர்றான்?”...