Shadow

Tag: Cheran Losliya Kavin

பிக் பாஸ் 3: நாள் 70 | பார்வையாளர்களின் கேள்விகள்

பிக் பாஸ் 3: நாள் 70 | பார்வையாளர்களின் கேள்விகள்

பிக் பாஸ்
காலர் ஆஃப் தி வீக்: “லாஸ்லியா - நீங்க சேரனை அப்பானு கூப்பிடுறீங்க, அவரும் உங்க மேல பாசமா இருக்காரு. ஆனா கவின் அதை ட்ராமான்னு சொல்லும் போது உங்களுக்கு ஏன் கோவமே வரல?” இந்தக் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதிலைச் சொன்னார் லாஸ். ‘நாங்க இங்க 24 மணி நேரம் இருக்கோம். நீங்க ஒரு மணி நேரம் தான் பார்க்கிறீங்க. எனக்காகச் சாப்பிட வெயிட் பண்றதா சொல்றாரு, ஆனா நேத்து சாப்பாடு வந்த உடனே சாப்பிட போய்ட்டாரு. டாஸ்க்ல என் மேல புகார் சொல்றாரு. அதனால இதெலாம் உண்மையான்னு எனக்குத் தெரில, நான் ஒரு கன்ஃப்யூசன்ல இருக்கேன். இதிலிருந்து நான் வெளிய வரணும். நான் நானா தான் இருக்கேன். இது தான் பதில்’ என கண்ணைக் கசக்கினார். ‘அதுக்கு இது பதில் இல்லையே!’ என்று தோன்றினாலும், கவினோடு தொடர்ந்து பேசிப் பேசி, அவரோட வாத திறமையும், நீட்டி முழக்கி விளக்கம் சொல்லும் கலையும், லாஸுக்கும் வந்துவிட்டது. அப்பா - மகள் உறவு கொண்டாடுவதி...