சந்திரஹாசம் – ஓர் அலசல்
அதென்ன சந்திரஹாசம்? சட்டென ஈர்க்காத இந்தத் தலைப்பை ஏன் விகடன் கிராஃபிக்ஸ் தேர்ந்தெடுத்தனர்? சந்திரஹாசம் என்பது பாண்டியர்களுடைய வீர வாளின் பெயர் (இது சந்திரஹாசம் இணையத்தள முன்னுரையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது).
புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களே ஏமாற்றத்தைத் தருகின்றன. 'இது தான் குளியலறை. இங்கே குளிப்பார்கள்' என குளியலறை காட்டி யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அப்படித்தான் சித்திரங்களுக்கு விளக்கவுரை போட்டு ஓவியர், வாசகர் என இருவரையும் அவமானப்படுத்துக்கிறார்கள். அதை விட கொடுமை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீங்கிய எழுத்துரு. உதாரணத்திற்கு, குதிரையின் குளம்புகளை மறைத்து "சல்.. சல்.." எனப் பெரிய எழுத்துகளில் போடப்பட்டிருப்பதைக் காணுங்கள். க்ர்ர்..
இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அப்படியே காலம் நழுவி பால்யத்துக்குள் நம்மைத் தள்ளி ...