சென்னையில் திருச்சூர்: ஆவணிப் பூவரங்கு
அன்றும், இன்றும், என்றென்றும் நம் தமிழ் மக்களுக்கும், மலையாள மக்களும் இடையே ஓர் வலுவான சகோதர உறவு நீடித்து வருகிறது. மொழி மற்றும் கலாச்சாரத்தால் நாம் வேறுபட்டு இருந்தாலும், அந்த சகோதர உறவால் நாம் ஒன்றுபட்டு தான் இருக்கிறோம். வருகின்ற அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதி 'தமிழிக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்' சார்பில் நடத்தப்பட இருக்கும் 'ஆவணிப்பூவரங்கு' திருவிழாவே அதற்கு சிறந்த உதாரணம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் இந்த திருவிழா, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தகவலை நேற்று 'தமிழிக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பு'-இன் சார்பில் ஸ்ரீ எம்.பி.புருஷோத்தமன் (கௌரவ தலைவர் - CTMA ), ஸ்ரீ கோகுலம் கோபாலன் (நிறுவனர் - CTMA), ஸ்ரீ எம்.எ.சலீம் (தலைவர் - CTMA), ஸ்ரீ வி.சி. பிரவீன் (நிறுவனர் - ஆவணிப் பூவரங்கு) மற்றும் டாக்டர் எ.வி.அனூப் (நி...