
ராஜபுத்திரன் – சிண்டிகேட் சதியில் சிக்கிய பாசக்காரன்
கடந்த மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது ’ராஜபுத்திரன்’ திரைப்படம். இந்த நிலையில், ‘ராஜபுத்திரன்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக படக்குழுவினர் கவலை அடைந்துள்ளனர். காரணம், ‘இப்படி ஒரு நல்ல படம் எடுத்தும் சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை’ என்பது தான். மக்களைத் திரையரங்குகளுக்கு வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரம்மாண்டமான முறையில் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, தந்தை - மகன் இடையிலான பந்தத்தைக் கொண்டாடும் வகையில் சொல்லியிருக்கும் இப்படத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தாலும், போதிய திரையரங்குகள் கிடைக்காமல் போனது பெருத்த ஏமாற்றம்.
டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன் என்று தமிழ் சினிமாவில் குடும்ப கதைகளும், உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் படங்களும் தொடர் வெற்றி பெற்று வரும் ந...




