Shadow

Tag: Cubes Entertainments

கட்டாளன் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கட்டாளன் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'மார்கோ' படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் புதிய திரைப்படமான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படத்தில், பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.போஸ்டரில், நடுக் காட்டுக்குள் பலர் செத்து விழுந்து கிடக்க, நடுவில் கொளுந்து விட்டு எரியும் நெருப்புக்கு மத்தியில், பிபி கையில் கோடாளியுடன் மிரட்டலாகத் தோற்றமளிக்கிறார். இப்படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். போஸ்டரின் தலைப்பு, நாகங்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றின் பின்னண...