Shadow

Tag: D.C.இளங்கோவன்

மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

சமூகம், சினிமா
தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது. கொரானோ தொற்றுப் பரவலைப் பொறுத்து, சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள் என எல்லாத் தொழில்களையும் நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்கத் தொழில் மூலம் அரசுக்கு வருவாய் தந்து வந்தது. இந்தத் தொழில் மூலம்சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது. திரையரங்குகள் மூடப்பட்ட பின் 5...