Shadow

Tag: Dear comrade movie

டியர் காம்ரேட் விமர்சனம்

டியர் காம்ரேட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காம்ரேட் என்றால் தோழர். முக்கியமாக கம்யூனிசத்தை அரவணைத்துக் கொண்டவர்கள், தங்கள் சங்கத்தின் சக உறுப்பினர்களைத் தோழர் என்றோ, காம்ரேட் என்றோ அழைப்பார்கள். 'நீ நினைப்பதைச் சாத்தியமாக்க சக காம்ரேடாக உன் வாழ்நாள் முழுவதும் துணையிருப்பேன்' என நாயகன் நாயகியிடம் கூறுகிறார். ஒரு காம்ரேடாக தான் சொன்னதை நாயகன் எப்படிச் செய்து காட்டுகிறார் என்பது தான் படத்தின் கதை. சமீபமாக, தமிழ்ப் படங்களின் கால அளவு இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவோ, அல்லது அதிகபட்சம் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாவது இருக்கிறது. ஆனால், தமிழில் டப் செய்யப்பட்டுள்ள தெலுங்குப் படமான இதன் கால அளவு 169 நிமிடங்கள். எனினும் படம் பார்க்கும் பொழுது இந்த நீளம் பெரிய குறையாகத் தெரியாதளவு சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர் பரத் கம்மா. இடைவேளை வரையிலான படமே ஒரு முழுமையான காதல் கதையைப் பார்த்த உணர்வைத் தருகிறது. இரண்டாம் பாதியில், பெண்களுக்கு எதிரான பா...