Shadow

Tag: Dhaayam vimarsanam

தாயம் விமர்சனம்

தாயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எட்டுப் பேர் நேர்முகத் தேர்விற்காக ஓர் அறையில் கூடுகின்றனர். ஒரு மணி நேரம் நடக்கும் அத்தேர்வின் முடிவில், ஒருவர் தான் உயிருடன் வெளியேற முடியும். அந்த ஒருவர் யார் என்பதே தாயம் படத்தின் கதை. பகடை உருட்டும் பொழுது, தாயம் விழ ஓர் அதிர்ஷ்டம் தேவை. எட்டுப் பேரில் யாருக்கு அந்த அதிர்ஷ்டம் என்பதே படத்தின் தலைப்புக்குப் பொருள். சஸ்பென்ஸ் த்ரில்லரில் யார், ஏன் என்ற கேள்வியைக் கடைசி வரை தக்க வைப்பது ஒரு கலை. ஆனால், ட்விட்டர் காலத்தில் அது காலாவதியாகி விட்ட பாணி. சஸ்பென்ஸை இன்றளவும் சுவாரசியப்படுத்துவது 'எப்படி' என்ற கேள்விக்கான விடை தான். யார், ஏன் என்ற கேள்விகளுக்கான விடையை, முதல் ஷோ பார்ப்பவர்களிடமிருந்து சகலருக்கும் தொழில்நுட்பம் கடத்தி விடுகிறது. எப்படி திரைக்கதை அமைத்துள்ளனர் என்பதுதான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். வெற்றி, என்பது இங்கே ரசிகர்கள் மனதில் படம் ஏற்படுத்தும் அழகிய மங்கா நின...