திகங்கனா சூர்யவன்ஷி @ தனுசு ராசி நேயர்களே
தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்குப் பதிலாக பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இச்செய்தியை உறுதி செய்த இயக்குநர் சஞ்சய் பாரதி கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை நாயகிகளில் ஒருவராகப் பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது. இருப்பினும், நடிகை ரியா அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள...