
“சென்ஸார் மறுக்கும் மர்மமென்ன?” – இயக்குநர் ராகேஷ்
எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' படத்திற்குச் சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் 'திலகர்' படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா; இன்னொருவர் அஞ்சனா.
இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்'கோபி, ‘சதுரங்க வேட்டை' புகழ் வளவன், 'நான் மகான் அல்ல' ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 1 அன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்யப் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது, “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன, இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும். ஒவ்வொரு நாளும் பெண்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோதச் சம்பவங்கள் நி...