
பீட்டர் ரேபிட் விமர்சனம்
பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட்.
துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் என்ற வார்த்தைப் பார்த்ததும் 2டி, 3டி போல் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். உடை அணிவிக்கப்பட்ட உயிருள்ள முயல்களை அப்படியே பாத்திரங்களாகத் திரையில் உலாவ விட்டுள்ளார்கள்.
தன் பெற்றோரை இழந்து வாடும் பீட்டர் ரேபிட், ப்யா எனும் பெண்ணின் பாசத்தில் திளைக்கிறது. ப்யாவிற்கும், பக்கத்து வீட்டில் குடியேறும...


