காவேரி மருத்துவமனை | ENT சிகிச்சைக்கான தனிப் பிரிவு தொடக்கம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு, மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
தூங்கும் பொழுது ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது கேளாமை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பது இந்த ENT பிரிவின் சிறப்பு அம்சமாகும். நுண் காது அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைச் செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தனிப்பட்ட உள்நோக்குமானி அறைகள், ஆடியோலஜி ஆய்வகம், தலைச்சுற்றல் ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் காது மூக...