Shadow

Tag: Drumsticks Productions

திருமணமான ஆண்களின் பிரச்சனைகளைப் பேசும் படம்

திருமணமான ஆண்களின் பிரச்சனைகளைப் பேசும் படம்

சினிமா, திரைத் துளி
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ - மாளவிகா மனோஜ்  ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குநர் 'பிளாக்‌ஷீப்' கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்சினைகளைப் பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாகச் சொல்லும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகிறது. பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், ஜென்சன் திவாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமாரின் இசை, வருண் கே.ஜி.யின் படத்தொகுப்பு, வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு , சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணி இப்படத்தில் ...
யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

சினிமா, திரைச் செய்தி
அருண் விஜயும், இயக்குநர் ஹரியும் இணையும் யானை திரைப்படம், ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி, “நானும், அருண் விஜயும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்தக் கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்தப் படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தைக் கொஞ்சம் வேற மாதிரி எடு...