
டங்கி | அன்பானவர்களை விட்டுத் தொலைவில் இருப்பதன் வலி
டங்கி டிராப் 2, ‘லுட் புட் கயா‘ பாடலைத் தொடர்ந்து, சோனு நிகாமின் அடுத்த டிராக்கிற்கான எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. மியூசிக்கல் மேஸ்ட்ரோ ப்ரீதமால் வடிவமைக்கப்பட்ட இந்த மெல்லிசைப் பாடல், முதலில் படத்தின் டங்கி டிராப் 1 வீடியோவில் அறிமுகமானது. அப்போதிலிருந்தே ஷாருக்கான் மற்றும் சோனு நிகாமின் கூட்டணியில் பார்வையாளர்கள் அப்பாடலை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தார்கள். பல ஆண்டுகளாக அழகான மெலோடிகளை, மறக்க முடியாத தருணங்களை உருவாக்கியதற்காக அறியப்பட்ட இந்தக் கூட்டணி, இந்த அற்புதமான "நிகில் தி கபி ஹம் கர் சே” எனும் அழகான டிராக்கில் தங்கள் மாயாஜால எனர்ஜியை மீண்டும் உருவாக்கியுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட டங்கி டிராப் 3, இதயம் வருடும் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதையை வெளிநாட்டுக்குச் செல்லும் தங்கள் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்ச்சரான பயணத்தை விவரிக்கிறத...