
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்
காஷ்மீர் ஆசிபா, அயனாவரம் சிறுமி போன்றவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்ணுறும்பொழுது, மனிதரகள் இவ்வளவு ஆபத்தானவர்களா என்ற நடுக்கம் அடிமனதில் இருந்து எழுந்தது. சக மனிதர்கள் என்று மனதில் எழும் நெருக்கம் மெல்ல அமிழ்ந்து, இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் அத்தகைய பயத்தை விதைப்பவர்களில்லை.
சிறை சென்றுவிட்டு வரும் மாமன் டேவிட்டும், ரோட்டில் அநாதையாகத் திரிந்து அடிபட்டு வளரும் மருமகன் தாமஸும் இணைந்து ஸ்வேதாவைக் கடத்துகின்றனர். ஸ்வேதா, தாமஸின் காதலி. ஸ்வேதாவும், தாமஸும் இணைந்து டேவிட்டை ஏமாற்றி எல்லாப் பணத்தையும் சுருட்ட முடிவு செய்கின்றனர். யார் யாரை ஏமாற்றுகின்றனர் என்பதே படத்தின் கதை.
ஃபிரான்சிஸ் டி'செளசாவாக யோகி பாபு நடித்துள்ளார். தாமஸின் ரூம் மேட்டாக வரும் இவர் நகைச்சுவைக்குப் பெரிதும் உதவிடவில்லை. ஸ்வேதாவின் அப்பாவாக ஜெயக...