Shadow

Tag: Embiran thiraivimarsanam

எம்பிரான் விமர்சனம்

எம்பிரான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எம் + பிரான் என்பதற்கு 'எனது தேவன்' எனப் பொருள்படும். ஜெயாவிற்குப் பிரியன் மீது ஒருதலையாகப் பயங்கரமான காதல். எவ்வளவு முயற்சி செய்தும், தனது காதலை வெளிப்படுத்தும் தைரியம் அவளுக்கு ஏற்படுவதே இல்லை. காதலைச் சொல்லும் முன், அவள் கோமாவிற்குச் சென்று விடுகிறாள். ஜெயாவின் காதல், பிரியனை எப்படிப் போய்ச் சேர்ந்தது என்பதுதான் படத்தின் கதை. படம் லோ-பட்ஜெட் என்றாலும், கதாபாத்திர வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். உதாரணமாக, கதாநாயகி வீட்டில் அவளும், அவளது தாத்தாவும் என இரண்டு பேர்தான் உள்ளனர். தாத்தாவும் இறந்துவிட, கோமாவிக் ஹாஸ்பிட்டலில் இருக்கும் கதாநாயகியைப் பார்த்துக் கொள்ளக்கூட யாருமில்லை. உறவினர்கள், நண்பர்கள் என ஒரு எக்ஸ்ட்ரா பாத்திரமும் இல்லை. யார் நாயகியின் மருத்துவச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றது, கவனித்துக் கொண்டது என எந்தத் தர்க்கத்திற்குள்ளும் செல்ல இயக்குநர் விரும்பவில்லை. ...