எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்
ஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும் நண்பர்களைச் செல்லமாக 'அடிமைகள்' என்கிறார் இயக்குநர். அப்படி, ஐ.டி.யில் வேலை செய்யும் ஜெய்க்கு மூன்று அடிமைகள் உள்ளனர். அவர்கள், வங்கியில் கேஷியராக உள்ள கருணாகரன், ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், கஸ்டமர் கேரில் வேலை செய்யும் நவீன் ஆகியோர் ஆவர்.
காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ஜெய். அவரைத் தேடித் தடுக்க முயற்சி செய்யும் அவரின் 3 அடிமைகளுமே அநாவசிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அடிமைகளை எப்படிப் பிரச்சனையில் இருந்து ஜெய் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் நாயகன் நாயகி பெயரளவிற்குத்தான். கருணாகரனும், காளி வெங்கட்டும்தான் படத்தின் உண்மையான நாயகர்கள். ஷேர் ஆட்டோ பின்னால் சென்று ரத்தம் சூடேறுபவர்களுக்கு, காளி வெங்கட்டின் அறிமுக காட்சி மிக நெருக்கமாக அமையும். காளி வெங்கட்டின் கதாபாத்திரத்தை அனுபவித்து எழுதிய...