
எந்திரன் விமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர் என கடந்த இரண்டு வருடமாக எதிர்பார்ப்பை எகிற வைத்த படம்.
வசீகரன் என்னும் விஞ்ஞானி பத்து வருடம் முயன்று 'சிட்டி' என்னும் அன்ட்ரோ- ஹியூமனாய்ட் வகை ரோபோவை இந்திய இராணுவத்திற்கு சேவை செய்ய வைக்கும் நோக்கில் தயாரிக்கிறார். பார்ப்பதற்கு மனிதனை போலவே இருக்கும் அந்த வகை ரோபோக்கள் அதற்கு கொடுக்கும் கட்டளைகள் சிரமேற் கொண்டு, அப்படியே செய்யும் அடிமைகள் போன்றன. மனித உணர்ச்சிகள் பற்றிய பிரக்ஞை இல்லாத ஓர் இயந்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆய்வாளர்கள் குழு மறுக்கிறது. வசீகரன் மீண்டும் 'சிட்டி' மனித உணர்ச்சிகளை புரிந்துக் கொள்ளும் படி பயிற்சியளிக்கிறார்.
உணர்ச்சி வந்ததும் வசீகரனின் காதலியான் சனா மேல் 'சிட்டி' ரோபோவுக்கு காதல் வருகிறது. காதல் வந்து எடக்கு செய்யும் 'சிட்டி' ரோபோவை கடுப்பாகி, வெறுப்பாகி அழித்து விடுகிறார் வசீகரன்....